• திசெம்பர் 2010
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,261,208 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு மகா வித்தியாலயத்துக்கு யுனிசெவ் நிறுவனம் நிதியுதவி

மண்டைதீவு மகா வித்தியலாயத்திற்கு யுனிசெவ் நிறுவனம் மூன்றரை இலட்சம் ரூபாய் நிதியினை வழங்கியுள்ளது.

இந் நிதி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாடசாலைக் கட்டடத் திருத்தத்திற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மேற்படி கட்டடத் திருத்தத்திற்குக் கல்வித் திணைக்களத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் கணனிக் கல்வியை மேற்கொண்டோருக்கு சான்றிதழ் வழங்கல் (படங்கள் இணைப்பு)

 

பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டவர்களுக்கான கணனிப் பயிற்சி நெறியை மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் மேற்கொண்டு வந்த சுமார் 15 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஆறு மாதங்கள் கொண்ட இப் பயிற்சி நெறியினை மண்டைதீவுப் பிரதேசத்தில் உள்ள பாடசாலையைக் கல்வி முடித்துக் கொண்டவர்கள் ஆர்வத்துடன் பயின்று வந்தனர்.

இவ்வாறு பயின்று வந்த மாணவர்களுக்கே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஒளிவிழா