• திசெம்பர் 2010
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,255,282 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவு மகா வித்தியாலயத்திற்கு சிறிதரன் எம்.பி. நிதியுதவி

மண்டைதீவு மகா வித்தியாலயம் உட்பட நான்கு தீவகப் பாடசாலைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலா 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் இந் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் எம்.பி.தீவகனுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை மண்டைதீவு மகா வித்தியாலயத்தின் அதிபர் சு.கனகரத்தினம் பான்ட் வாத்தியக் கருவிகள் கொள்வனவு செய்வதற்காக மேற்படி நிதியினைப் பயன்படுத்தவுள்ளதுடன் மேற்படி வாத்தியக் கருவிகளுக்கு எம்.பியினால் ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறையாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதனையடுத்துத் தீவகன், சிறிதரன் எம்.பியுடன் தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி பான்ட் வாத்தியக் கருவிகள் வாங்குவதற்கு, ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறையாகவுள்ளமை தொடர்பில் தெரிவித்ததையடுத்து,

அவர் பான்ட் வாத்தியக் கருவிகளை வாங்குவதற்கான முழுமையான தொகையினையும் தான் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

நயினாதீவு கணேசா வித்தியாலயம் நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம், அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம் மற்றும் மண்டைதீவு மகா வித்தியாலயம் ஆகிய நான்கு தீவகப் பாடசாலைகளுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

நன்றி தீவகன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: