• நவம்பர் 2010
  தி செ பு விய வெ ஞா
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  2930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,268,797 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு மகா வித்தியாலயத்துக்கான சுற்று வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பம் (படங்கள் மற்றும் காணொளி இணைப்பு)

மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸினால் மண்டைதீவு மகா வித்தியாலயத்துக்கான சுற்றுவேலி அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

நேற்று மேற்படி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திப்பில் சுற்றுவேலி அமைக்கும் திட்டம் தொடர்பில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் தலைவர் சிவப்பிரகாசம் சிறிகுமாரன் எடுத்துரைத்தார்.

அதற்கு வேலி அடைப்பதற்கான பொருட்களை கொள்வனவு செய்து தரும் பட்சத்தில் அதனைக் கொண்டு தாங்கள் (பெற்றோர்கள்) சிரமதானம் என்ற அடிப்படையில் வேலியினை அடைப்பதாக உறுதியளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்தே இன்று மேற்படி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களினால் வேலி அடைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப் பணிகளில் ஈடுபட்ட பெற்றோர்களுக்கு சுவிஸ் ஒன்றியத்தினால் காலை மற்றும் மதிய உணவும் பரிமாறப்பட்டுள்ளது.

இவ் சுற்றுவேலி அமைப்பதற்கான சகல மூலப் பொருட்களையும் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலே நீங்கள் பார்த்த காணொளியில் முதலாவதாக மண்டைதீவு மகா வித்தியாலயத்தின் அதிபர் சு.கனகரத்தினமும் இரண்டாவதாக மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸின் தலைவர் சி.சிறிகுமாரனும் பெற்றோர்களுடன் இணைந்து சிரமதானப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

(இவர்களது சிரமதானம் படத்திற்காக மாத்திரம் எடுக்கப்பட்டதல்ல)


 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: