• செப்ரெம்பர் 2010
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,248,425 hits
  • சகோதர இணையங்கள்

தீவகனின் செய்திக்கு சுவிஸ் ஒன்றியம் விளக்கம்

 

2010.08.30 ஆம் திகதி தீவகனில் மதில் கட்டும் பணியில் தாமதம் ஏன் என்ற தலைப்பிடப்பட்ட செய்திக்கு மண்டைதீவு மக்கள் ஒன்றியம் சுவிஸ் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் சிவப்பிரகாசம் சிறிகுமரன் தீவகனுக்குத் தெரிவித்ததாவது,

மண்டைதீவு மகா வித்தியாலயத்துக்கான முன்பக்க மதில் கட்டும் பணியில் சிறிய தாமதம் ஏற்பட்டடுள்ளது. அதற்குக் காரணம் பாடசாலைக்கான கேற் அமரர் சுந்தரமூர்த்தி அவர்களின்  ஞாபகார்த்தமாகவே  அமைக்கப்பட்டது.

எனவே அவர் உறவுகள்  அனுமதி பெற்றுப் பின்னர் அக் கேற்றினை இடமாற்றம் செய்ய உத்தேசித்திருந்தோம். அதன் படி அவர்களிடம்  தொடர்பினை ஏற்படுத்தி அதற்கான அனுமதியையும்  பெற்றுக் கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னர் மதில் கட்டும் பணியினை ஒப்படைத்த ஒப்பந்தகாரர்களுக்கு கேற் மற்றும் மூன்று தூண்கள் அமைப்பதற்கு ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

ஏனெனில் கேற்றினை அமைத்தவர்களே  அதனை மீண்டும் அமைத்துத் தர வாய்ப்பிருக்கும் என்ற காரணத்தினால் அதனை நாங்கள் சேர்த்துக் கொள்ளவில்லை.

எனவே அவர்களினாலும் அப் பணியினைச் செய்து தர முடியாது போனமையால் தற்போது பிறிதொரு ஒப்பந்தகாரர்களிடம் மீதிப் பணியினைச் செய்வதற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் சிவப்பிரகாசம் சிறிகுமரன் தெரிவித்தார்.

அத்துடன் மதில் கட்டும் வேலைகளுக்கும் மண்டைதீவு மக்கள் ஒன்றியத்துக்கும் எதுவித தொடர்புமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸின் நிர்வாக சபைக் கூட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாகவும் இதில் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: