• ஓகஸ்ட் 2010
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,248,426 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவில் விஷமிகளால் வீடு உடைப்பு

Posted on 28/08/2010 by தீவகன்

மண்டைதீவுப் பிரதேசத்தில் நேற்றிரவு சில வி­மிகளால் சேமன் கைலாசபிள்ளைக்குச் சொந்தமான, மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகா மையில் உள்ள  வீடு பலத்த சேதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு திடீரென வீட்டினுள் உட்புகுந்த சில வி­மிகள் சுவர்களை உடைத்தும் வீட்டின் மேல் ஏறி ஓடுகளை கழற்றி வீசியும் வீட்டையும் சின்னாபின்னமாக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

அந்த வீட்டில் பகலில் இருக்கும் மூதாட்டியான திருமதி தெட்சணாமூர்த்தி லக்சுமிஅம்மா இரவில் உறவினர் வீட்டில் தங்கியிருப்பது வழக்கம்.

மேற்படி அந்த மூதாட்டி விடியற்காலை வந்து பார்த்தபோது வீடு பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளதை அறிந்து கிராம உத்தியோகத்தர் இ.ரமேஷ் அவர்களிடம் மேற்படி சம்பவத்தைத் தெரிவித்துள்ளார்.

மேற்படி வீட்டின் உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமான விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் அவ் வீட்டில் குடியிருந்த திருமதி தெட்சணாமூர்த்தி லக்சுமிஅம்மாவிடம் வாய்மூல வாக்குமூலத்தை கிராம அலுவலர் இ.ரமேஷ் மேற்கொள்வதை கீழ் உள்ள காணொளியில் பார்க்க முடியும்.

3 பதில்கள்

 1. ஒரு ஆலய தர்மகத்தாவின் அடாவடியா?

  வேறு சூத்திரதாரிகளின் சதியா?

  இவ்வளவு இன்னல்களின் பின்பும் ஊரில் இப்படி ஒரு நிலையா. வெட்கப்படுகின்றோம்,வேதனைப்
  படுகிறோம்.இன்று ஒருவர்க்கு, நாளை யாருக்கும் நீரலாம். ஆகையால் ஊர்மக்களும் கிராம
  அதிகாரிகளும் சேர்ந்து குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும்,கண்டுபிடித்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதுவே ஊருக்கும் மக்களுக்கும் நல்ல விடயமாக அமையும். குந்தி இருக்க எத்தனையோ எம் உறவுகள் கொட்டில் இன்றித் தவிக்கின்றார். இவைகளைப் பார்த்த பின்பும்……..

 2. intha seyal periyakuttamillai.yenenral ithu etkanave araikurayaka idinthirunthathum, ithu thiruvenkadu kovilukku sonthamana nilamumaakum. intha veedo or kaniyo vetidamaka irunthalthan kovilukku nanmaiyakum. makkalukku ithu thiruvenkaddanin seyal enru puriyavillaipolirukkirathu.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: