60 வது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் மண்டைதீவு மக்கள் ஒன்றியத் தலைவர்!!!
மக்கள் ஒன்றியம் மண்டைதீவு அமைப்பின் தலைவர் அருளானந்தம் ஸ்ரீ பத்மராசா அவர்கள் (ஜே பி) கடந்த சனிக்கிழமை 03 .09 2011 அன்று தனது 60 வது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளார் எனவும் அன்பு மனைவி பிள்ளைகளுடனும் உறவினர்களோடும் மிகவும் எளிமையாக அவரது இல்லத்தில் கொண்டாடியதாகவும் அவரை அனைவரும் அன்போடு வாழ்த்தியதோடு விருந்து உபசாரத்திலும் கலந்து கொண்டதாகவும் தகவல் மக்கள் ஒன்றியம் மண்டைதீவு அமைப்பினர் இடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.
இத்தகவலை அறிந்துகொண்ட மண்டைதீவு இணையம் அவர்களை வாழ்த்துவதுடன் மக்கள் ஒன்றியம் மண்டைதீவு அமைப்பினரும் சேர்ந்து பல்லாண்டு காலம் பலர் போற்ற வாழ்ந்து மக்கள் சேவைகள் பல புரிந்து நீடுழிகாலம் வாழ, நிறைந்து நின்று நின்னவன் எனும் எல்லாம் வல்ல நிகரில்லா நித்தியனை வேண்டிநிற்கின்றோம்.
வாழ்த்துக்களுடன்
மண்டைதீவு இணையம்.
மக்கள் ஒன்றியம் மண்டைதீவு அமைப்பு.
வணக்கம்
எமது இந்த இணையத்தில் உறுதியாக இருந்த வாசகர்களுக்கும்
வளர்த்து எடுக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும், உடனுக்குடன்
செய்திகளை தந்து உதவிய தீவகனுக்கும் மண்டைதீவு மக்களுக்கும் நன்றிகள்..
மென்மேலும் எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இன்றுபோல் என்றும் உங்கள்
ஆதரவை தந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இரண்டாவது ஆண்டில் காலடி
எடுத்து வைக்கும் மண்டைதீவு இணையத்தின் அமைப்பினர். மீண்டும் நன்றிகள் பல
தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று 26 ஆவது அகவையில் காலெடி எடுத்து வைக்கும் செல்வன் ச.அருணனுக்கு எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்புடன் அண்ணன்
சுவிஸ்சிறி
தீவகதிருமகனுக்கு அகவை 26 திக்கெட்டும் உம் பெயர் சொல்ல
திகட்டாது வாழ்த்துகின்றோம்.இன்று போல் என்றும் இனிமையுடன் வாழ
மண்டைதீவு மக்களும் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
அமைப்பினரும் வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துக்களுடன்
மண்டைதீவு அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வாழ்ந்துவரும்
மண்டைதீவு மண்ணின் முத்துகள் ஆகிய
சி .ஆதவன் , சி அபிநயா இருவரும் குடும்பத்துடன் அவர்களின் இல்லத்தில் மிகவும்
எளிமையாக 15 .08 .2010 அன்று பிறந்தநாள் கொண்டாடுகின்றனர் .
அவர்களை அம்மா அப்பா மற்றும் சிவா பெரியப்பா குடும்பத்தினர் ,சந்திரா அத்தை
குடும்பத்தினர் ,கெளரி அத்தை குடும்பத்தினர் ,சசி சித்தப்பா குடும்பத்தினர்
ஜெயா அத்தை(குட்டி) குடும்பத்தினர் மற்றும்
நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருளுடன் பல்கலைகளும்
பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என வாழ்த்துகின்றனர் .
வாழ்த்துகளுடன்
மைத்துனர் மயூரன் .
பொன்விழா காணும் பொன்குமாருக்கு…
தீவகத்தின் திருவுருவாம் திருக்கடல் சூழ்
திவ்வியப்பதி உறை வாழ் பொன்னம்பலம் தம்பதியர்
ஈன்றெடுத்த இளஞ்செல்வன் பொன்குமார் பொன்விழாவில்
இன்றுபோல் என்றும் சகல சௌபாக்கியமும் பெற்று
சீரிய சிந்தனையின் செயல்வடிவாய் பேரிய பெரும் பேறுகளும்
பெற்று நற்பணியிலும் நீடூழிவாழ
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சார்பாக
வாழ்த்துரிய வாழ்த்துக்களை வாழ்த்துகின்றோம்
வாழிய வாழிய பல்லாண்டு.
நன்றி
பொன் விழாக் காணும்
பொன் குமார் நண்பனே…
மண்ணின் வாசனையில்
கலையெனும் சிகரம் தொட்டு
தனக்கென தனியொரு வழிசமைத்த
வெற்றிப்பாதை கலைப்புருசியே
தமிழ்ப்புகழ் வரி சமைத்து
தனிப்பெரும் புகழ் கொண்ட
நண்பரே பொன் குமாரா
நண்பர்கள் நாம் கூடி-சுவிஸ்
அல்ப்ஸ் மலை அடிவாரத்திலும்
கலைக்கு வித்திட்ட மன்றமாம்
இளங்குரல் நாடக மன்றத்தின்
தனிப்புகழ் நல் நாயகனே
தரணியில் தலைப் புகழாய்
தம்பதியராய் தந்தையாய்
சேய்களோடு இல்லறத்தில் இன்புற்று
பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றோம்…
இளங்குரல் நாடகமன்றம் சுவிஸ்.
சிறிரவி சிறிகௌரி தம்பதியினரின்
ஆண்டு பதினைந்து இல்லற வாழ்வின்
தொடரினிலே….
வாழிய வாழிய பல்லாண்டு
வாழ்க்கையில் தேன்சுவை பலகண்டு
வானகம் மெச்சிடும் வரையினிலே
வாழ்வினில் வெற்றிகள் பலகண்டு
வாழிய வாழிய நலமோடு
வையகம் போற்றிட வாழியவே
பிள்ளைகள் செய்திடும் குறும்பினிலே
பிளவுகள் இல்லா நலம் கண்டு
முன்னவர் வாழ்ந்த முறை கண்டு
வாழிய வாழிய பல்லாண்டு…..
வாழ்த்தும்.
ஜெயாநளா குடும்பத்தினர்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
அன்பு நண்பனுக்கு
அகவை ஜம்பது…….
நண்பனே நாட்டில்
நாம் வாழ்ந்த காலம்முதல்
நாடுவிட்டு நாடு வந்தாலும்
நட்பு மட்டும் மாறாமல்
நாம் சொந்தத்திலும் இணைந்தோம்
நண்பனே தோழனே பொன்குமாரா
நற்பணி செய்திடவும் இணைந்து
நல்ல முடிவையும் கண்டோம்
நம் உறவு நிலைத்திடவும்
நல் அருளை வேண்டுகின்றோம்
நலத்தோடும் சுகத்தோடும்
நல்ல தமிழ் உணர்வோடும்
நலன்கள் பெருகி இல்லறத்தில்
நலமுடன் மனைவி பிள்ளைகள்
நாற்புறமும் நல்வாழ்வு வாழ
நல்வாழ்த்துக் கூறுகின்றோம்…..
ஜெயம் குடும்பம்
சுவிஸ்.
ஐம்பதாவது அகவையில் கால் பதித்துப் பொன்விழாக் காணும் பொன்குமாருக்கு தீவகன் இணையம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, அவர் சகல செளபாக்கியங்களும் பெற்று இவ் உலகில் நீடூழி காலம் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரை வேண்டி நிற்கின்றோம்.
தீவகன்.
(www.theevakan.tk)
என் அன்னையவள் உருவெடுத்த கருவறையில் நீயும் உருவெடுதாய்! இன்று ஊரும் உறவும் போற்றும் புகழ் எடுத்தாய்! உறவு கொள்ளாத உறவு என்னும் உரிமையுடன் என் உள்ளம் நிறைந்து வாழ்த்துகின்றேன் ! தரணி போற்றும் தமிழனாய் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றேன். ராஐன் யேர்மனி
happy birthday wishes have a nice and great to all year……..
26 ஆவது அகவையில் காலெடி எடுத்து வைக்கும் செல்வன் ச.அருணனுக்கு எனது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வாழ்த்துத் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்றும் அன்புடன்
ச.அருணன்.
மண்டைதீவு மண்ணின்
மணங்கமள புலம் பெயர்ந்த
மக்கள் அனைவரையும்
புலத்திற்கு கொண்டு செல்லும்
உன்னதபணி சுமக்க
உரிமையுடன் பிறந்த
மண்டைதீவு சீ ,எச்சுக்கு
இன்று ஓர் ஆண்டு
இன்று போல் என்றும்
மண்ணின் மணங்கமள
அனைத்து நிகழ்வுகளையும் -சுமந்து
ஆழக்கால் பதித்து
அரும் பணிகள் ஆற்றி நிற்க
வாழ்க வாழ்கவென
வாழ்த்தி நிற்கும்.
அருளீசன்.
ஓராண்டை பூர்த்தி செய்துருக்கும் மண்டைதீவு.சீஎச்
எனும் இணையதளம் ஆனது தனது நல்லெண்ண முயற்ட்சிகளின் பயனாக செய்திகளை மக்களுக்கு கொண்டுசென்று தனது வளர்ட்சியை பெருக்கி வரும் இவ் வேளை மென்மேலும் வளர்ந்து செல்ல வாழ்த்துகின்றோம்.
மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா
தீவகத்தின் தலைத்தீவு எனும் பெருமைகொண்ட மண்டைதீவு மண்ணின்
மைந்தர்களால் உருவான மண்டைதீவு இணையம். அதற்கென்றே தனி வழி
நின்று ஓராண்டு ஒளிகண்டு ஈராண்டில் கால் பாதிக்கும் வேளையிலே தலைத்தீவின் தனிமெருக்கோடு தரணியிலே வளம் வர வாழ்த்துகின்றேன்.
நன்றி
தலைத்தீவாள் எனும் மெருக்கோடு
ஜனனி
எங்கள் மண்ணின் புகழ்பூத்த கலைஞன் பொன்.குமாருக்கு,
பொன்விழாப் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். உன்னைப் பெற்றதால் உன் பெற்றோருக்கு மட்டுமல்ல எம் மண்டைதீவு மண்ணுக்கே பெருமை. வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று, ஊராண்ட மன்னர் புகழ்போல, உலகாண்ட புலவர் தமிழ்போல நீ நூறாண்டுகாலம் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க.
உளமார்ந்த அன்புடன்
திருமதி. சொர்ணலிங்கம், மண்டைதீவு.
சொ.லிங்கதாசன், டென்மார்க்.
இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மண்டைதீவு இணையம் மேன்மேலும் வளர்ந்து, புகழ்பரப்ப உளமார்ந்த வாழ்த்துக்கள்.
உவகையுடனும், உள்ளன்புடனும்
இ.சொ.லிங்கதாசன்
ஷேபி, டென்மார்க்
அகவை ஒன்றைத் தாண்டியும்
அள்ளி வீசும் நறுமணம்போல்
மண்டைதீவு இணையத் தளம்
என்றும் புலர வேண்டும்
மண்டைதீவின் மகிமையையும்
மக்களின் நலன்களையும் மனதில் நிறுத்தி
மங்காத ஒளியாய்- என்றும்
உலகெலாம் ஒளிக்கவேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன்…..
துளசிதுவாரகன்.
வாழ்த்துத் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
என்றும் உங்களுடன் இணைந்திருக்கும்
மண்டைதீவு இணைய அமைப்பினர்.