மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் நிர்வாக சபைஉறுப்பினர்கள் விபரம்
தலைவர் சிவகுருநாதன் திசைரூபன், செயலாளர் வைரவநாதன் தயாகரன், பொருளாளர் தர்மலிங்கம் சபேசன், உப தலைவர் சிதம்பரநாதன் மணிமாறன், உப செயலாளர் யோகநாதன் பிரதீபன் .
இவர்களுடன் நிர்வாக சபை அங்கத்தவர்களாக, சி.ஜெயசிங்கம், ஏ.எஸ்.சோமசுந்தரம், தே.தேவபாலன், செ.ஜெயக்குமார், கு.செல்வகுமார், சி.நவரூபன் .
போசகர்களாக க.கனகசபாபதி மற்றும் சி.தேவநாயகமும் கணக்காய்வாளராக வை.ரஜினிகாந்.
கனடா ஒன்றியத்தின் ஊதிய கொடுப்பனவு
அனுதாப அஞ்சலி
கனடா ஒன்றிய விளையாட்டுப் போட்டி நிகழ்வு
மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் கோடைக் கால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் 22.08. 2010 ஆம் திகதி கனடாவில் உள்ள தோம்சன் பார்க்கில் நடைபெற்றுள்ளது. இவ் விளையாட்டுப் போட்டியில் கனடா வாழ் மண்டைதீவு மக்கள் பலர் கலந்து கொண்டதுடன் சிறுவர்கள் பெரியவர்கள் எனப் பலரும் இவ் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குகொண்டு பரிசில்களைப் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் கோடைக்கால விளையாட்டுப் போட்டி-22.08.2010
மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் கோடைக் கால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டிகளும் எதிர்வரும் 22 ஆம் திகதி தோம்சன் பார்க்கில் நடைபெறவுள்ளதாக மண்டைதீவு மக்கள் ஒன்றிய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
இந் நிகழ்வில் கனடா வாழ் மண்டைதீவு மக்களும் அவர்தம் உறவுகள் அனைவரையும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு மண்டைதீவு மக்கள் ஒன்றியத்தின் கனடா உறுப்பினர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006/2007 ஆகிய ஆண்டுகளில் மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடாவினால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் நிழற்படங்களைக் கீழே காணலாம்.
(படங்கள்:- வை.தயாகரன், கனடா)
எவ்வளவோ மண்டைதீவு மக்கள் கனடாவிலிருந்தும் .. கலந்து கொண்டோர்களின் எண்ணிக்கை சிறு வட்டத்துக்குள் உள்ளது போல் இருக்கு… இதில் மண்டைதீவார் கனடாவில் ஒன்றியம் தொடங்கி இருக்கின்றாகள் என்று பெருமை பட்டாலும் எம்மவரின் ஒத்துளையாமையை நினைத்து கவலை பட வேண்டியும் உள்ளது.. முன் நின்ற்று உழைப்பவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்
எம் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் பார்க்க ஊரில் நிற்பது போல இருக்கும்
ஆனாலும் வந்து பங்கு பற்றியவர்களுக்கு மிகமிக நன்றிகள்
வணக்கம்,
எதிர்வரும் சித்திரை மாதத்திலிருந்து தீபம் இணைய சஞ்சிகை {www.theebam.com} தீபம் வாசகர்களுக்காக “எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா” என்ற தலைப்பில் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த எம்மவர்களின் சொந்த ஊர் தொடர்பான கட்டுரை வழங்க த்தீர்மானித்து உள்ளது.நீங்கள் உங்கள் ஊரின் பெயரின் தோற்றத்தினையும்,பெருமையினையும், உங்கள் ஊரை வளர்த்த பெரியோர்கள் அடங்கலாக எழுதி அனுப்புங்கள்.கிடைக்கும் கிரமப்படி அவை மாதாந்த மலரில் வெளியிடப்படும்.அனுப்பவேண்டிய மின்-முகவரி
manuventhan@hotmail.com
நன்றிகள்
தீபம்
Canada Vaazhl Tamil Mandaitivu Makkalukku en anbaana Vaazhlththukkal.,
Anbudan Ungalil Oruvan Sethu.Thavam(Rajah.Thavam)Germany
Happy to see these events.