நா
அகரமும்,லகரமும் தெரிந்தவனே
சொல்லுக்கு துணை போய்
மல்லுக்காய் உச்சரிப்பாய்
மாயை உண்டு பண்ணி
மகுடிபோல் ஊதி
மண்டியிடவும் செய்வாய்
மகிடமும் சூட்டி நிற்பாய்
விகடங்கள் பேசி விட்டு
விசித்திரமாய் பலதும் கூறி
வீம்புக்காய் அறை கூவி
விசத்தையும் கொட்டிவிட்டு
ஏட்டிக்கு போட்டியும்
எள்ளி நகை யாடலும்
மொத்தமாய் மூட்டிவிட்டு
சொல் தணலில் குளிர் காய்வாய்
கூதலில் அலை வோரை
குளிர்காய கூட்டமைப்பாய்
உன் சுழற்சிக்குள் அம்பிட்டால்
யானை வாய் கரும்புதானே
இனிப்பு பிரியர்களுக்கு
இனிய கொண்டாட்டம்
இதயம் உள்ளவர் திண்டாட்டம்
சொந்தங்களை பிரித்தும்
பந்தங்களை பந்தாடியும்
தரணம் பார்த்து உந்தன்
தரவுக்காய் காத்து நிற்பாய்
வரவுக்காய் இன்றினும்
வஞ்சத்துக்காய் உச்சரிப்பாய்
சுதி,சுரிதி, மாற்றமும்
சுவையான சுழற்ச்சியும்
எஐமானின் திருத்திக்கே.
அருள்ஈசன்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பார் சொல்லிழுக்குப் பட்டு
மீழுமா தமிழினம் தீருமா நீதியின் பொறி முறை
படுதுயர் நிகள்ந்த பத்தாண்டின் நிறைவில்
பாராமுகம் தானே பன்நாட்டோர் நிகழ்வு
நாடுசார் சூழ்ச்சியில் கைகோர்த உலகம்
நம்கால்கலை வாரி தம்கால்களை பதித்து
தாம் கொண்ட இலக்கை தரவாக்கி
தன்னலப் போட்டிக்காய் எம்மை நசுக்கி
ஆங்காங்கே பங்கு போட்டு நிற்க
ஆழுமை கொண்டவர் ஆட்சியை காக்க
அவர் அவர் போட்டிக்குள் ஆயிரம் வீயூகங்கள்
அரவனைத்த கூட்டிற்குள் நீயா நான என
இல்லை நான் தான் என்று உள்நுளையும் வில்லங்கம்
இடக்கு முடக்காக குடும்ப ஆதிக்கம் கொள்ள
தட்டுவோம் தருவிப்போம் என்று சொன்வர்கள்
தடம் பிரண்டு குபேரன் பொம்மை போல் தலையாட்டி
கல்லாவை நிறைக்க கதிரைகாக்க வென்றே
கறைபடிந்த நல்லாடச்சியின் விசுவாசிகளாய்
தாம்கொண்ட குறிகளைந் தோராய் நம்மோர்
தம்மை தாம் ஏமாற்றி மக்களின் பொல்லாப்பில்
கழங்கம் கொண்டு நிற்கும் வேளையில் தான்
கிணற்றில் பூதமதாய் கிளம்பியது உயிற்த ஞாயிறு
பத்தாண்டின் நிறைவிலும் அங்குலம் அங்குலமாய்
படைவிலகிய நிலம் முழுதாய் அரை நாளில் பறிபோய்
மீண்டும் அடக்கு முறைக்குள் ஒடுங்கிய வாழ்வு
மீழுமா தமிழினம் தீருமா நீதியின் பொறி முறை
வஞ்சம்
நெஞ்சம் புண்ணாக்க
வஞ்சம் சுமந்து வசைபாடி
பொங்கும் இன்பத்தால்
மகிழ்வாகும் நெஞ்சங்களே
எங்கும் பொங்கும் வஞ்சம்
எம்மையும் சூழும்
அன்று நம் நெஞ்சமும்
வலியால் வாடும்
நாம் விதைத்த வஞ்சம்
அவர்கள் நெஞ்சத்தையும்
பாடாய் படுத்தியதை
உணரும் நெஞ்சம்
வஞ்சம் கூறாது வாழும் .
அருள்ஈசன்
தொன்மை தூங்குவதா
செம் மொழியான தமிழ் மொழியே
உன் அடிமுடி தேடி அலையிது உலகம்
பன்நாட்டு அரசு பலமுனை கொண்டு
ஆய்வென்றும் அறிவியல் என்றும்
குமரிகண்டத்து ஆழ்தடம் தேடி ஆய்வு
செய்துவிட்டு உண்மைக்கு பிறம்பாய்
உபதேசம் செய்வது ஏன் என்ற
கேள்வி உன்னில் எழும்வரை உண்மை
உலகறியா,நம்மை நாம்அறியாது
மாற்றான் மொழிகலந்து பேசுவதும்
தனிச்சிறப்பென்று எண்ணுவது மாறாது
விண்ணில் சந்திராயன் ஆய்வில்
உன் மண்ணில் அடுத்தவன் ஆய்வு
தொன்மையை எல்லோரும் அழிக்க எண்ண
தமிழா இன்னும் நீ தூங்குவதா …
அருள்ஈசன்
தமிழுக்கு ஒரு அருந்ததி
ஏழ்மை குடும்பத்தின்
எண்ணத்து அருந்ததியாய்
றாமர் ஈசுவரத்தில்
வந்து உதித்தார்
அப்துல்கலாம் எடுத்தஅடி
அத்தனையும் ஏணிப்படி
ஏழ்மையின் பிடியிலும்
எண்ணியதை அடைய
ஓயாத உணர்வுடன்
ஒன்றொன்றாய் வென்று
பெற்றோரை மகிழ்வித்த
பெருமகன் ஆனார்
கற்றலையும் கற்பித்தலையும்
கண்ணாக எண்ணியவர்
வின்ஞானி ஆனார்
வீரத்துக்கு விண் ஊர்ந்து
உந்து செலுத்தியும்
விவேகத்திற்காய்
செயற்க்கை கோள்
செய்மதியும் தந்து
பார் ஆழ எண்ணுவோர்க்கு
பதிலடி கொடுத்த
பேரறிவாளன்
பெருந்தலைவர் கலாம்
இவர் தமிழ் தாய்க்கு
இணையற்ற புகழ்வாரி
இந்திய திருநாட்டின்
குடியரசு தலைவர்
குலம்காத்த மாமனிதர்
கடைசி மூச்சுவரை
கற்றலுக்கும் கற்பித்தலுக்கும்
உயிரூட்டியே உயிர்திறந்தார் .
அருள்ஈசன்.
அன்பு சகோதரியே.
அன்பு சகோதரியே
உன் வீட்டு முற்றம் நான் வந்து சென்ற போதும்
இன்று என் கண்களுக்கு உன் முகம் தோன்றவில்லை
கைகோர்த்து ஓடி ஆடி விளையாட போதிலும்
கட்டி அணைத்து என் தங்கையே என்று
அணைக்காத போதிலும் இன்று என்
கண்களில் கண்ணீர் கசிகின்றது.
கண் காண தேசம் கடல் கடந்து வந்த போதும்
அண்ணன் தம்பியுடன் உறவுகள் கலந்த போதும்
உன் பொன்முகம் காணா அன்பு அண்ணனின்
கண்ணீர் கவலை இது ……………………………………….
நீர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற
நிம்மதி கொண்ட போதும் என் கண்கள்
கடல் ஆகின்றன
காவியம் படைத்த என் தங்கையே
உன் காலடியில் என் வணக்கத்தை
சமர்ப்பிக்கின்றேன்.
சுவிஸ் சிறி, சுவிஸ்லாந்து
எழுத்தாளன் சத்தியனே.
தேசமே நேசமென்றும்- தமிழ்
தேசியமே சுவாசம் என்றும் மண்டைநகர் வளர்த்தெடுத்த
மண்ணின் மைந்தனே எழுத்தாளன் சத்தியனே
தமிழே மூச்சு தமிழே உயிர் தமிழே வாழ்வு
தமிழே வீடென்று வாழ்ந்தவனே
ஊடகத்துறையில் உன் இழப்பு என்றென்றும்
வெற்றிடமே இதயங்கள் குமிறுகின்றன சத்தியா
சத்தியம் ஜெயிக்கும் நம்பிக்கை வார்த்தையில்
நெஞ்சங்கள் ஆறுகின்றன உனது ஆன்மா என்றென்றும்
எங்களோடு துணை நிற்கும்.
—————————————————————————————-
கலக்கமில்லை கள்ளமில்லை
கவிதை வடிக்கின்றேன் .
காதல் வலி தந்தவனே.
மனதினில் என் மனதினில் உந்தன் முகம் வந்து
ஏனோ ஏனோ என்னை கொல்கிறது.. காதலும் நீயேன வாழ்வும் நீயென
வாழ்க்கையை தொலைத்தேன் வாலிப வயதினிலே…
உறவுகள் இருந்தும் என் உயிர் நீயேன
உயில் எழுதி தரவா உயிர் ஓவியமே
உறங்கா உன் நினைவுகள் உறக்கத்திலும் உளரலாய்
காற்றினில் கலக்குதடா காதல் வலி தந்தவனே.. என் கண்ணை பாரடா
என் இதயத்தின் வலிகள் இரு விழிகளிலும் தெரியுமடா
இதயத்தில் பூவாய் மலர்ந்தவனே..
ஏனடா என் இதயத்தை புயலடித்த தேசமாய் மாற்றினாய்.. காதலில் என்னோடு சேர்ந்து வாழ்ந்தவனே..
கண்ணீரையும் கனவுகளையும் காதல் பரிசாக தந்து விட்டு போனாயேயடா
காதல் வலி தந்தவனே.. காதல் என்னைவிட்டு பிரியவில்லை நீமட்டும் ஏனடா
என் காதலை விட்டு பிரிந்தாய்..
என் காதலும் எங்கே என் கவிதையும் எங்கே
சொல்லிவிட்டு போ இல்லை என்னை கொன்று விட்டு போ.
பாமினி சுவிஸ்
நான் பைத்தியக்காரிதான்….
என்னை காதலிக்கிறேன் என்று சொல்லி கரம் பிடித்தவனே
இன்று என்னை நட்ட நடு வீதியில் தவிக்க விட்டு
நீ மட்டும் எப்படி சந்தோசமாய் இருக்கிறாய்
உன்னால் மட்டும் எப்படி முடிகிறதுடா
பதிலை சொல்லடா எனக்கு…?நான் உன்னை காதலித்தது பாவமா..?
இல்லை உன் நினைவால் தினம் தினம்
நான் தவிப்பது பாவமா… ?
நீதான் வேண்டும் வேண்டும் என்று
உந்தன் பின்னால் அலைவதா…?
எதடா நான் செய்த பாவம்…? காலம் மாறும் என் காதலும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை பாதையில்
போராடி கொண்டு இருக்கிறேன்
என் போராட்டத்துக்கு முடிவேயில்லையா காலங்களோடு போராடுகின்றேன்..
காத்திருப்போடு தவிக்கிறேன்..
காயப்பட்ட உள்ளம்
கண்களில் காணல் நீராய் தினம் தினம்
கண்ணீர்த் துளிகள் வடிகின்றது .. என்னை பைத்தியக்காரி என்கிறாய்
நான் பைத்தியம் தானடா என்னை தூக்கி எறியும்
உன்னை தேடித்தேடி அலைகிறேனே
நான் பைத்தியம்தானடா…
பாமினிசுவிஸ
காதல் தொல்லை….
கண்விழி மூடாமல்
பார்த்த பார்வை
காதலெனும் மோகத்துள்
விழுந்து தொலைந்தேன்
கடைக் கண் பார்வையும்
குறை நிறை புன்சிரிப்பும்
என் நெஞ்சத்தை மேலும்
கொள்ளையிட்டுக் குழப்பியது
கனவிலும் நீதான் -என்
நினைவிலும் நீதான்
காதல் தந்த மோகத்தால்
கட்டவிழ்ந்த காளை ஆனேன்….
துளசிதுவாரகன்.
ஏஞ்சலீனா ஜூலி – உண்மையான தேவதை
மிதமிஞ்சிய பணத்தை
செலவு செய்ய தெரியாமல்
போதைக்கு அடிமையாகி
பேதையாக வாழ்பவர் மத்தியில்
மூன்று குழந்தைகளை தத்தெடுத்து! -மேலும்
இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து!
பாரதத்தின் குந்தி போல
ஐந்து மக்களுக்கு தாயாகி இருப்பவளை
பார்த்த பின் தோன்றுகிறது
பெயரில் மட்டுமல்ல
உண்மையிலும் தேவதைதான் அவள்!
===============================
எழுதியது ஜெகதீஸ்வரன்.
காதல் கடிதங்கள்.
பத்திரிகை தோறும் பிரசுரமாகும்
எனது கவிதைகள் எல்லாம்
நான் உனக்கு எழுதிய
காதல் கடிதங்கள் தான்,
அதை உன்னிடம் கொடுத்து இருந்தால்
படிக்காமலே கிழித்து போட்டு இருப்பாய்
இப்பொது என் காதல் கடிதங்களை
கவிதைகள் என்று எண்ணி
நீ படித்து ரசித்து கொண்டு இருக்கின்றாய்
என் காதலியே.
சுவிஸ் சிறி
———————————————————————
தவம்கிடக்கின்றோம்…..
தமிழர் நாம் தவம்கிடக்கின்றோம்
தலைமை மீண்டும் வருவதற்கே
தலைவா நீயும் வரவேண்டும்
தகவல் பலவும் தரவேண்டும்
தலை நிமிர்த்திய தமிழினம்
தாழ் பணியும் நிலைவருமா
தமிழ் நெஞ்சமெலாம் வெடிக்கிறது
தரணியில் மாற்றம்தான் பிறந்திடுமா
தமிழரின் சந்ததி தழைத்திடுமா
தமிழ்த்தாயின் மடியில் உறங்கிடுமா
தமிழே உயிரே என்மூச்சு
தாயே உன்னிலை மாறிடுமா
தமிழரின் ஒற்றுமை நிலைவேண்டும்
தாயகம் வெல்வதில் செயல்வேண்டும்
தமிழரில் வேற்றுமை இனிவேண்டாம்
தாயை மறக்கும் நிலைவேண்டாம்…..
துளசிதுவாரகன்
ஆனந்தபுரம்…..
ஆண்டொன்று ஆனதுவோ
ஆனந்தமயமாக மக்கள்
ஆடிப்பாடி வாழ்ந்த இடம்
அரக்கர்கள் கால்பதித்து
அமைதியைக் குலைத்து
அவலைக்குள் தள்ளி
அடியோடு ஆனந்தத்தை
அழித்தொழித்த கரிநாள்
ஆறாத வடுவாக
அழிவுகளைச் சுமந்த நாள்
தேன்தமிழ் சுவையோடு-தமிழ் பயின்று வாழ்ந்த பாலகர்கள்
பசியோடும் பிணியோடும்
பரதவித்து மடிந்த நாள்
தமிழ் மண் மீட்டிட
மார்தட்டி நின்ற தமிழ்
என் குலப் பெண்டீர்
மூத்தவர்கள் மடிந்த நாள்
அழுதோம் தொழுதோம்
அரவனைக்க யார் வந்தார்
இந்த உலகம் இருந்தாலென்ன
இந்த உலகம் அழிந்தாலென்ன
ஆனந்தபுரத்தின் ஆனந்தத்தை
மறுபடியும் எப்போ காண்போம்…..
துளசிதுவாரகன்
செல்லமே நீ முட்டாள்
காதல் தந்த சோகத்தையே
இன்றும் நினைகின்றேன் .
காகிதத்தில் கப்பல்
விட்டால் மிச்சமில்லையே !!!
கரைந்து விட்டேன் என்னில்
இப்போ சொர்க்கம் இல்லையே .
கனவு கூட உன் நினைவில்
கலந்து விட்டதே .
காத்திருப்பேன் கடைசிவரை
தியாகம் செய்யவே உனக்காக .
————————————————–
ஏது நம்பிக்கை எனக்கு?
அன்று என்னை காதல் செய்
என்று நீ என்னிடம் கேட்டது.
இன்று நீ யாருக்கோ காதலி
என்று நான் கேள்விப்பட்டது!!!
கனவுக்குமுளிகள் உடைந்து விட்டன,
கட்டிய கோட்டைகளோ சீரழிந்து விட்டன,
கண்களோ கங்கைக்கு இணையாகி விட்டன,
எல்லோரா ஓவியமே என் அருமை காவியமே,
என்னிடத்தில் தான் நீ அச்சு ஆவாய்,
எனக் காத்திருந்தது என் இதயப் பத்திரிகை.
இருந்தும் நீ வேறு இடத்தில் அச்சாகி விட்டாய்,
என்று தகவல் வந்தது இதுக்கு மேல்
ஏது நம்பிக்கை எனக்கு?????
——————————————————–
நீ கல் தானா?
உன் மனம் பிஞ்சாக இருக்கும் என்று தான்
உன்னை ஒடித்து பார்க்காமல்
நினைத்து பார்த்தேன், ஆனால்
உனக்காக உன் உறவினரிடம்
நான் உதைபட்ட பொது நீ
பேசாது இருந்ததை கண்ட பின்பு தான்
உன் மனம் பிஞ்சு இல்லை
கல் என்று தெரிந்து கொண்டேன்.
ஓ மனமே உண்மையிலே
நீ கல் தானா?????
—————————————-
அன்பு நண்பனே…
மண்ணுக்காய் உயிர்தந்த என் நண்பனே
உன்னை மறக்க முடியவில்லையே
அன்று அதிகாலையில் கிணற்றுக்கட்டிலிருந்து
இருவரும் பேசிய வார்த்தைகளை மறக்கமுடியுமா
பள்ளிப்பருவத்திலிருந்து இருவரும் துள்ளி
குளுதிகுத்தித்திரிந்த காலத்தை நெஞ்சம் தொடுகிறதெடா
புத்தகத்தோடு கோவில் மண்டபத்திலும்
கடற்கரை மணலிலும்
உருண்ட புரண்ட காலத்தைத்தான் மறக்கமுடியுமா
என் அருமை நண்பா
என் உயிர் உள்ளவரை
எப்படி உன்னை மறப்பேன்
நெஞ்சம் நெகிழ்கின்றதெடா
கண்கள் சொரிகின்றதேடா
கோவில் திருவிழா ஆகட்டும்
களியாட்ட விழா ஆகட்டும்
புளுதியின்மேல் உன்மடியில்
தலைசாய்த்து
உறங்கிய காலத்தைத்தான் மறக்கமுடியுமா
என் உயிர் நண்பனே
என் உயிர் உள்ளவரை-உன்னை
எப்படியடா மறப்பேன்
எவன் எமை எதிர்ப்பினும்
நெஞ்சுரத்தோடு நெஞ்சை நிமிர்த்தி
ஏமம் கேட்கும் உன்மனப்பாங்கை மறப்பதா
நெஞ்சார ஆறுதல் கூறும்
உன்மேன்மைக் குணத்தை மறப்பதா
எதை மறப்பேன் என்னுயிர் நண்பா
என்வாழ்வோடு சேர்ந்தவனே
என் வாழ்நாள் உள்ளவரை
எப்படியடா உனை மறப்பேன்.
துளசி துவாரகன்
—————————————————
தவிக்கின்றேன் …..
சந்தித்தேன் உன்னை நான் சந்தித்தேன்
ஏன் என்று புரியவில்லை ஏன் என்று தெரியவில்லை
சிந்திக்கும் நேரத்தில் நி சிறகடித்து போனாயோ
சிரத்தையில் நின்றவளே சீரழித்து போனாயே
சீர்கெட்ட மனிதர் என சிரத்தையில் சொன்னாயா ?
திசை மாறி நி போக -வேறு திசையின்றி தவிக்கின்றேன் .
19.06.2016.பதிவு
—————————————————————————————–
பிரிவின் கொடுமை…
உயிர் பிரிவதை விட கொடுமையானது உறவின் பிரிவு ….
இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் என்னை ஒரு நாள் வன்மையாக தண்டிக்கும் உன்னை பிரிந்த சில வருடங்களுக்காக …
பிரிந்தாலும் …உலகத்தில் நீ யாரோ தான் -ஆனால் எனக்கோ ?உலகமே நீ தான் ..! எங்கிருந்து வந்தாயடா என்னிடம் இத்தனை அன்பு காட்ட …!
உன் புதுமையான அன்பால் ஒவ்வொருநாளும் புது பிறவி எடுக்கின்றேனடா…! தொலைவில் நீயிருந்தாலும் என்னுள்ளே உன்னை உணர்கின்றேன் என் உயிர் , உடல் , உணர்வு அனைத்தும் ஓட்டிக்கொண்டவன் நீ. என் கனவுகள் நியமாகும் முன்பே காற்றினில் என் உயிர் கலந்தாலும் காதல் தேவதையாய் வாழ்வேன் என்றும் உன் அருகில்..!
பதிவு 19.06.2016.
——————————————————————————————————————–
செந்தமிழ் கன்னியே
சிந்தையில் நிறைந்தவளே
உன்னழகு என்னையே
கொல்லுமது நித்தமே
இலக்கியம் பின்னழகா
இயலென்ன இடையழகா
இசையென்ன சொல்லழகா நாடகம் நடையழகா
நாம்போற்றும் வடிவழகா
தேமதுரத் தமிழழகே
திசையெங்கும் நீயழகே வான்போற்றும் மன்னரெல்லாம்
வணங்கிட்ட உன்னழகு
வாழ்ந்தவிதம் என்னதன்றோ
வாழும்விதம் ஏதன்றோ வாய்வீரம் பேசியே
வீழ்ந்ததடி எம்மினம்
வாழ்வதாக நினைத்துன்தன்
வைத்திருப்பும் இல்லாதாகுமோ?
17.08. 2016 பதிவு.
முயற்சிகள் தோற்காது..!
–
உறக்கத்தில்
முளைக்கும்
கனவுச் சிறகுகள்
சிகரத்தில்
சேர்க்காது!
–
கிறக்கத்தில்
பிறக்கும்
காதல் அலைகள்
கரையினைச் சேராது!
–
இருட்டினை
நெஞ்சில்
ஏந்தி யிருப்போர்
இலக்குகள்
ஜெயிக்காது!
–
அருட்திரு
வேடம்
தாங்கிய போலிகள்
சாபம் பலிக்காது!
–
பிழைப்புக்குப்
பிறர்கால்
பிடிக்கும் எத்தரை
உலகம் ஏற்காது!
–
உழைப்பைத்
தம்மின்
உயிரெனக் கொண்டோர்
முயற்சிகள் தோற்காது!
25.08.2016 பதிவு.
ஆரம்பம்!
ஆசிரியர் அடித்தால்
மனம் உடைந்து
விஷம் குடிக்கிறான்
ஒரு மாணவன்…
* கல்லூரி போகுமுன்னே
காதல் வலையில் வீழ்ந்து
தூக்குக் கயிற்றை
தேடுகிறாள் ஒரு மாணவி!
* கள்ளக்காதல் வெளியில்
தெரிந்தவுடன் மானம் காக்க
கடலில் குதிக்கிறது
ஒரு ஜோடி!
* மேலதிகாரி கொடுமையை
எதிர்க்கத் துணிவின்றி
ரயில் முன் பாய்ந்து
உயிரை விடுகிறார்
ஒரு நேர்மையான அதிகாரி!
* கட்சித் தலைவர்களுக்கு
தண்டனை என்றால் தலையில்
பெட்ரோல் ஊற்றிக் கொள்கிறார்
ஒரு தொண்டர்!
* வயிற்று வலி
கடன் தொல்லை தாங்காமல்
உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் பலர்!
* அவர்களுக்குத் தெரியாது
மரணம் என்பது முடிவல்ல…
அவர்கள்
செயலை தூற்றி பிறக்கப்போகும்
அவப்பெயரின் ஆரம்பம் என்று!
25.08.2016 பதிவு.
ஓரெழுத்து கவிதை கேட்டாய்…
ஓரெழுத்து கவிதை கேட்டாய்
நீ என்றேன்
ஈரெழுத்து கவிதை கேட்டாய்
நாம் என்றேன்
மூன்றெழுத்தில் கவிதை கேட்பாய்
காதல் என்று சொல்லலாமென
காத்திருக்கையில்தான்
பிரிவு என்ற கவிதை
பிறந்தது உனக்குள்!
25.08.2016 பதிவு.
உன் மனதில் யாரோ..
உன் முகம் –
என்சுகம்
–
உன் சிரிப்பு
என் பூரிப்பு
–
உன் மனம்
என் கனம்
–
உன் அகம்
என் வசம்
–
உன் மொழி
என் வழி
–
உன் கன்னம்
என் சின்னம்
–
உன் எண்ணம்
என் வண்ணம்
–
என் மனதில் நீ
உன் மனதில் யாரோ?
குறுந்தகவல்(SMS)
நான் மூடன் அல்ல
இருந்தலும் கிளி ஜோசியம் பார்க்கிறேன்.
கிளியின் ஒரு நிமிட
விடுதலைக்காக!
கவிதைகளை வாசிப்பது மட்டுமல்ல
நேசிப்பதும் சுகம்தான்!-ஆம்
நான் நேசிக்கும் அழகான
கவிதை நீ!
உன்னைவிட்டு பிரியும்போது-நான்
தனியே பேசிக்கொள்கிறேன்.
என் நிழலுடன் அல்ல-உன்
நினைவுகளுடன்.
உன்னை கண்ட நாள் முதல்
நட்பு கொண்டேன்-பின்பு
காதல் கொண்டேன்!
நட்பு உன் மீது-காதல்
நம் நட்பு மீது.
நான் ரோஜாவைப் போல்
அழகானவன் அல்ல-ஆனால்
என் மனம் ரோஜாவைவிட அழகானது;
ஏன் தெரியுமா?
அதில் நீ இருக்கிறாய்!
எனக்குளே ஒரு வெக்கம்
ஏங்கி வந்த பொண்ணு ஒன்னு
தாங்கி வந்து அன்பு காட்டி
பாசம் தந்து பரிவு ஊட்டி
சோகம் நீக்கி துயர் நீக்கி
நிறைவு தந்து மகிழ்ச்சி தந்து
உள்ளம் மயக்கி எண்ணம் கவர்ந்த
என்னவளின் பெயரைச்சொல்ல
நானு நினைக்கும் போது
நாக்கு ஏனோ ஒட்டிகிச்சு!
வெட்கம் வந்து பத்திக்கிச்சு!
நான் ஒரு புதினம்……
என் வீட்டு மாட்டுக்கும்
தன் மானம் பெரிது
கழுநீர் என்றாலும்
தன் வீட்டுத் தண்ணீரே குடிப்பதாய்…..
என் வீட்டு நாய்க்கும்
பண்பு அதிகம்
படலை திறந்தாலும்
பக்கத்து வீட்டுள் நுழைவதில்லையென்று…..
என் வீட்டுத் திண்ணைக்கும்
அத்தனை பெருமிதம்
இன்முகங் காட்டி
இருப்பதைக் கொடுத்து உபசரிப்பதாய்……
என் எழுதுகோலுக்கும்
சற்றே தலைக்கனம்
நல்லதை மட்டுமே
தான் எப்போதும் பேசுவதாய்……..
போகுமிடமெல்லாம்
என்னுடன் மிதிபடும்
என் செருப்புக்கும் கூட
கர்வம் அதிகம்
மதியாதார் முற்றம் தானும் மிதிப்பதில்லையென……
என் மனைவிக்கும் கூட
நான் ஒரு புதினம்
பிழைக்க தெரியாதவன் என்று…..
——————————————————
posted by sri 21.03.2017.
காதலும், நட்பும்!
எக்கணம் நினைத்தாலும்
இரு விழிகள் ஈரத்தை கசிய விடும்…
–
ஆயிரம் உறவுகள் வந்தாலும்
எட்ட முடியாத உயரத்தில் இருந்தாலும்
தேசம் விட்டு தேசம் சென்றாலும்
தேகத்தில் தேங்கியே இருக்கும்…
–
தேடி வந்த சொந்தங்களும்
நாடி வரும் பந்தங்களும்
கோடி கோடியாய் கொட்டினாலும்
பாச மழை பொழிந்தாலும்
இறுதி மூச்சு உள்ளவரை
இதயத்தில் இணைந்திருக்கும்…
–
காலங்கள் கடந்தாலும்
தலைமுறைகள் தழைத்தாலும்
உள்ளத்தின் உள்ளே
உறைந்து கிடக்கும்
உண்மைக் காதலும், நட்பும்!
–
—————————
— ஆர்.மீனா, மதுரை.
நான்..நீ…!
மே 23, 2012 இல் 8:17 முப (கவிதை)
மழை தேடும் பூமி நான்..
மேகம் சுமக்கும் வானம் நீ..
இரவோடு வரும் இருள் நான்..
என்னைத்தழுவ வரும் நிலவு நீ..
அயர்ந்து தூங்கும் அதிகாலை நான்..
அடித்து எழுப்பும் விடியல் நீ…
எழும்ப மறுக்கும் சோம்பல் நான்..
உற்சாகம் தரும் தேனீர் நீ..
காட்சிகள் தொலைத்த கனவு நான்..
காட்சிகள் தரும் கண்கள் நீ..
எழுத நினைக்கும் கவிதை நான்..
வர மறுக்கும் வார்த்தை நீ…
அடம்பிடிக்கும் குழந்தை நான்..
ஆசைகாட்டும் திருவிழா நீ..
தினம் வரும் பகல் நான்..
எனக்குள் வர முடியா இரவு நீ..
வாசிகசாலை புத்தகங்கள் நான்..
வாசித்துமட்டும் செல்லும் வாசகி நீ..
எதுவரை நான்….
அதுவரை நீ…!
கவலையைத் தொலைத்துவிடு…!
ஜூலை 9, 2017
–
தோல்விக்காக கவலைப்படாதே
கவலைப்பட்டால்
கவலைக்காக கண்ணீர் விடவேண்டும்
கண்ணீர் விட்டால்
கண்ணீரைத் துடைக்க கைகள் வேண்டும்
–
கண்ணில் வரும் கண்ணீரை துடைக்க
நம் கையை விட மூன்றாவது கையையே
மனம் எதிர்பார்க்கும்
மனிதனைப் போல் வேறு எந்த உயிரும்
ஆறுதல் தேடுவதில்லை
–
காக்கை கூட்டில் குயில் முட்டை
காக்கை அடைகாக்க
குயில் குஞ்சு கண்விழிக்க
காக்கை அடையாளம் காண
பொன் குஞ்சுக் கூட்டுக்குள் வந்த
–
புண் குஞ்சை விரட்டுகிறது…
குயில்கள் தன் பிறப்பின்
அவலத்தை எண்ணியா கூவுகிறது.
–
குயிலின் குரல் எவ்வளவு இனிமை!
கவலையின் குரலில்
இனிமை இருப்பதில்லையே
கவலையுடன் இருந்தால்
பயம் பிறக்கும்
பயத்துடன் இருந்தால்
பயணச்சீட்டுக்கூட
பாராங்கல்லாய் மாறிவுடும்.
–
உன் கவலைக்கு மறதியென்னும்
மயானத்தில் கல்லறை கட்டு
உன் மனதில் கவனம் எனும்
வண்ணம் சேர்ந்தால்
வசந்தமும் வாசமும்
ஒளியும் வீசும்.
கண்ணீர் – அது
இனபத்தின் விளிம்பில் வரட்டும்
அந்த கண்ணீரை
யாருக்கும் தெரியாமல்
துடைக்குத் கொள்வதே
பேரின்பம்
–
—————————
–நலங்கிள்ளி
வாழ்க வளர்க்க வளமுடன்
வாயார வாழ்த்துகின்றேன்.
நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு ,
வளமான முன்னேற்றம் அடைய முயற்சி
செய்கின்றோம் .
நன்றி வணக்கம்
good work.
add some details about mandaitivu.
thanks
I Love my Land (Mandaitivu) .add some details about mandaitivu.
நன்றி மென்மேலும் வளர எம் ஆசிகள்
Libe Gedichter,Viele Grüsse
valga makkal valarga nam villege
நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு ,
வளமான முன்னேற்றம் அடைய முற்சி
செய்கின்றோம் .
நன்றி வணக்கம்