• ஏப்ரல் 2020
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  27282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,207,795 hits
 • சகோதர இணையங்கள்

வணக்கம் மண்டைதீவு மக்கள் அனைவருக்கும்

 

நம் ஊர் நினைவலைகள்

 

 

கொரோணாவின் அறிகுறி

உங்களுக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற கொரோனா நோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா?

இந்த அறிகுறிகள் உங்களிடம் இருப்பதால் நீங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் இவை கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகளுமாகும்.

எனவே உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கவும். இந்த நாட்டின் குடிமக்களாக இது உங்கள் தேசியப் பொறுப்பாகும்.

மருத்துவத் தேவை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.

வீட்டில்:

முடிந்தால் உங்களுக்காக ஒரு தனி அறையை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்;

உங்களுக்கும், உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூர இடைவெளியைப் பேண வேண்டும்;

உங்களால் முடிந்தால் தனியான கழிப்பறை / குளியலறையைப் பயன்படுத்துங்கள். அவ்வாறு இல்லாது நீங்கள் ஒரே குளியலறையை / கழிப்பறையைப் பயன்படுத்துவதாக இருந்தால் அவற்றின் கதவு கைப்பிடி, தண்ணீர்க் குழாய் போன்றவற்றை சவர்க்காரம் மற்றும் தண்ணீர் என்பவற்றினால் கழுவிவிடுங்கள்;

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முடிந்தவரை குறைக்கவும்;

நீங்களும் வீட்டிலுள்ள மற்றவர்களும் அடிக்கடி மற்றும் முழுமையாக கைகளை கழுவ வேண்டும் (குறைந்தது 20 விநாடிகளுக்கு);

உணவுத் தட்டுகள், தேனீர் கோப்பைகள், கண்ணாடி குவழைகள், துவாய் மற்றும் படுக்கை விரிப்புக்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்;

தும்மும் போது அல்லது இருமும் போது எப்போதும் உங்கள் வாயை ஒருமுறை மட்டும் பாவிக்கக்கூடிய தாளினால் அல்லது முழங்கையின் உட்புறத்தால் மூடிக்கொள்ளுங்கள்;

பயன்படுத்திய தாள்களை மூடி கொண்ட ஒரு குப்பைத் தொட்டியில் இட்டு பாதுகாப்பாக அகற்றுங்கள்;

நீங்கள் பயன்படுத்திய அனைத்து முகமூடிகள் மற்றும் கையுறைகளை ஒரு மூடி கொண்ட குப்பைத் தொட்டியில் இட்டு அப்புறப்படுத்துங்கள்;

மிக முக்கியமாக, கடந்த ஒரு மாத காலத்திற்குள் நீங்கள் வெளிநாட்டில் இருந்திருந்தால்,

அத்தோடு, கடந்த ஒரு மாத காலத்திற்குள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் ஒரு நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தால், உடனடியாக உங்கள் பகுதியின் பொதுச் சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரியிடம் தெரிவியுங்கள்.

மருத்துவ சிகிச்சை குறித்த மேலதிக ஆலோசனைகளுக்கு 1999 என்னும் தொலைபேசிச் சேவையை அணுகுங்கள்.

சிகிச்சைக்காகப் போக்குவரத்து ஒழுங்குகளைச் செய்ய வேண்டுமெனில், 1990 என்ற தொலைபேசி இலக்கத்தில் நோயாளர் காவு வண்டிச் சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள்.ஶ்ரீலங்கா

நலிவுற்ற மக்களுக்கான 29ஆவது கொடுப்பனவின் விபரம்

மரண அறிவித்தல்


மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த துரையப்பா இராசபூபதி அவர்கள் இன்று 23.03.20 திங்கட்கிழமை சாம்பியன் வீதி கொக்குவிலில் காலமானார் என்பதனை அறியத்தருகினறோம்.
இவர் யோகேஸ்வரன்,சாந்தா ( பிரான்ஸ்) அவர்களின் அன்புத்தாயும் ஆவர் அன்னா ரின் இறுதிக்கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும் .
யோகேஸ் 0771254589
சாந்தா +33652207259

அருந்தமிழர் வாழ்வியலில்அன்றாடம்சிறுபிணிக்கு

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!
Ref :Sangi 😂

கொரோனாவால் முடங்கியது பிரான்ஸ்

பிரான்ஸில் குட்டி யாழ்ப்பாணம் என அழைக்கப்படும் லாச்சப்பல் பகுதியில் உள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றது பிரான்ஸை அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அத்தியாவசிய அங்காடிகளைத் தவிர பிற வர்த்தக நிறுவனங்களுக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையுத்தரவு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கும் என அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத் தடையுத்தரவு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கும் என அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

மரணஅறிவித்தல்


மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் (கண்ணைக அம்மன் கோயில் அருகாமை)தற்போது நாகபடுவாணை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மணிமலர் அவர்கள் இன்று காலமானார்.இவர் சுப்பிரமணியம் பொன்னம்மா அவர்களின் மகளும், மகாதேவா,மகேஸ்வரி, (சோதி) மகாதேவி,(கிளி)
மகாலிங்கம்,(துரை)
மகேந்திராஜா,(சுவிஸ் )
ஆகியோரின் சகோதரியும் ஆவர் அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை
16.03.2020 திங்கட்கிழமை 1மணியளவில் நாகபடுவானில் நடைபெறும் என்பதனை அறியத்தருகினறோம்

தகவல்
மகேந்திரராஜா (சுவிஸ்)